4
இடதுசாரி கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் இடதுசாரி கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், சகல இடதுசாரிக் கட்சிகளும் இணக்கம் எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.