வீதித்திறப்பு ஆளுநர் பின்னணி!

by wp_shnn

புதிதாக திறக்கப்பட்ட வீதியை யார் சொல்லி திறந்ததென அரசியல்வாதிகள் உரிமை கோரிவரும் நிலையில் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆளுநர் பங்கெடுத்த சந்திப்பொன்று நடந்துள்ளது.  பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்   வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும்  யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்