on Sunday, November 03, 2024
மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 6 பேர் வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்டனர்.
இதன்போது ஒரு டிங்கி படகு, 227 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடி செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படையானது தீவினை சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளையும் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை அரிப்பு மற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 – 50 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் கடலட்டைகள் மற்றும் இழுவைப் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.