வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி !

by adminDev2

வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி ! on Sunday, November 03, 2024

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டம்பரில் வெளிநாட்டு பணியாளர்கள் பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியாக வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பியுள்ள மாதாந்த தொகை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்