5
முன்னாள் அரசியல் கைதிகள் இருவர் கைதாகியுள்ள அறுகம்பே குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைத்தீவு பிரஜை உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுகம்பே குடா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
“இதுவரை, மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.