சுமந்திரன் வெளிவிவகார அமைச்சரா?விளக்கம் கோரும் கம்மன்பில?

by wp_shnn

தமிழரசுக்கட்சி அமைச்சு பதவிகளை  ஏற்பதில் பின்னிற்கப்போவதில்லையென்ற எம்ஏ.சுமந்திரனின் அறிவிப்பின் மத்தியில் பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தமொன்றை ஜனாதிபதி செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமந்திரனின் அமைச்சுப் பதவி பெறுவதை வரவேற்கிறோம். அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

“ இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றி, புதிய அரசியலமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளமை முதல் நிபந்தனை யாக உள்ளது. அந்த அணுகுமுறை நாட்டு மக்களை இன ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாத நலன்களுடன் ஒத்துப்போகிறது.

இரண்டாவது நிபந்தனையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவும் இராணுவத்தினரை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் முதல் மாதத்திற்குள்ளேயே அரசியல் நண்பர்களை பாதுகாக்க இவ்வாறு செயற்பட்டதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் இதுதொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்..

தொடர்புடைய செய்திகள்