8
காஸா போருக்கு நடுவே இசையில் ஆறுதல் தேடும் பாலத்தீனிய குழந்தைகள்
காஸா போருக்கு நடுவே இசையில் ஆறுதல் தேடும் பாலத்தீனிய குழந்தைகள்
காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் போரில் குழந்தைகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக யுனிசெஃப் கூறுகின்ற சூழலில், போர்ச் சூழலுக்கு மத்தியில் குழந்தைகள் இசையை கற்றுக் கொள்கின்றனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தன்னுடைய கையின் ஒரு பகுதியை இழந்த முகமது தற்போது வயலின் கற்றுக் கொண்டிருக்கிறார்.
நான் வயலின் வாசிக்கும்போது போரின் சூழலை நான் மறந்துவிடுகிறேன் என்று கூறுகிறார் முகமது.
பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் புகுந்த பள்ளியில் குழந்தைகளுக்கு இசை எப்படி ஆறுதல் அளிக்கிறது?
இதைக் கற்றுக்கொள்ள குழந்தைகள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்?
விரிவாக வீடியோவில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு