சுகாதார அமைச்சு தொற்று நோய்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவொன்றை திந்துள்ளது. நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பிரிவு தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
தட்டம்மை, ரூபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் குறித்த தகவல்களை இந்த பிரிவின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, 0117 446 513 அல்லது 0117 682 722 அல்லது 0117 682 872 மற்றும் 0117 682 662 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு தட்டம்மை நோயாளியின் மூலம், 18 பேருக்கு அந்த நோய் பரவலாம். தட்டம்மை நோய்க்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள், அவற்றை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு தட்டம்மை இல்லாத நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்த போதிலும்இ கடந்த வருடத்தில் இருந்து மீண்டும் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எனவே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட நோய்த்தடுப்பு வாரத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.