ஐக்கிய ஜனநாயக குரலானது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் – பெரியசாமி பிரதீபன்

by smngrx01

ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் இன்று 02.11.2024 சனிக்கிழமை காலை ஹட்டனில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.

இதன் போது இந்த தேர்தலின் பின்னர் எதிர்கட்சி தலைவராக ரஞ்சன் ராமநாயக்க பதவி ஏற்பார் என்று தெரிவித்தார். பதவிக்கு வந்துள்ள புதிய அரசு திருடர்களை பிடிப்பதாக கூறியிருந்தனர் எனினும் இதுவரை மத்திய வங்கி திருடர் உட்பட எவரையும் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,
சஜித் தரப்பில் போட்டியிடுபவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்ற பின் ஐக்கிய ஜனநாயக குரலோடு இணையவுள்ளனர்.

சிறுபான்மையின கட்சிகளும் , வடக்கு-கிழக்கில் இருக்கின்ற கட்சிகளும் பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதால் ஒரு பலமான எதிர்கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ பகலில் ஒரு கதையையும், இரவில் ஒரு கதையையும் மது போதையில் ஊசலாடுகிறவர் என தெரிவித்தார். அத்தோடு, சஜித் பிரேமதாஸ வேட்புமனுவை கையளித்ததன் பின்னர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதால் சிலர் கட்சியில் இணைய முடியாமல் போனதாகவும், பொதுத்தேர்தல் முடிந்தவுடன் பலர் கட்சியில் இணைந்து பலமான எதிர்கட்சியும் , எதிர்கட்சி தலைவரும் உருவா உள்ளதாக தெரிவித்தார்.

பிரதமருக்கான சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கப்பெற்ற பின்னும் எதற்காக அவர் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என கேள்வி எழுப்பியவர் , இன்னமும் மத்திய வங்கியின் மோசடி தொடர்பில் எந்த விதமான நடடிவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.

அநுர குமார தெரிவித்ததை போல ராஜபக்ஷ குடும்பத்தினரை நீதிக்கு முன் நிறுத்தாமல் இருப்பது அவர்களுக்குள் டீல் இருப்பது போல மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நிலையற்ற அரசாங்கத்திடம் இருந்து நாட்டை மீட்டு , ஐக்கிய ஜனநாயக குரலானது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டுமானால் மைக் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் நுவரெலிய மாவட்ட வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்