வீட்டோடு இருந்து மாவையின் விஞ்ஞாபனம்

by guasw2

தமிழரசுக்கட்சியின் பெயருக்கான தலைவராக இருந்துவரும் மாவை சேனாதிராசா தற்போது தேர்தல் அரசியலில் இருந்து விலகிவருகின்றார்.சுமந்திரன் தரப்பின் கைப்பாவையாக இருந்து பலியாடாக்கப்படுவதாக மாவையின் மகன் உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றனர.

இதனிடையே இன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்விற்கு சுகயீனம் காரணமாக வர முடியாதிருப்பதாக தெரிவித்து மாவை சேனாதிராசா வீட்டோடு இருந்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்கு படையெடுத்து கட்சிக்காரர், கட்சியின் விஞ்ஞாபனத்தை; வெளியிட்டு வைக்குமாறு பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கத்திடம் விஞ்ஞாபனத்தைக் கையளித்ததாக தெரிவித்துள்ளனர். 

தமிழரசுக் கட்சியின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான, சி. சிறீதரன், இ. ஆர்னோல்ட் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர்  உடனிருந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்