‘உருவ ஒற்றுமையால் எங்கள் ஆசிரியர்கள் திணறுகிறார்கள்’ – ஒரே பள்ளியில் 60 இரட்டையர்கள்
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரின் போலீஸ் டிஏவி பள்ளி அதன் இரட்டையர் மாணவர்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. ஒன்றல்ல, இரண்டல்ல, இங்கு படிக்கும் சுமார் 120 மாணவர்கள் இரட்டையர்கள்.
இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ரஷ்மி விஜ் பிபிசியிடம் பேசுகையில், “நாங்கள் இரட்டையர்களுக்கு என எந்தச் சலுகையும் வழங்கவில்லை அல்லது பெற்றோர்களிடம் அவர்களது இரட்டைப் பிள்ளைகளை இங்கு சேர்க்க கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் பள்ளியில் இவ்வளவு இரட்டையர்கள் படிக்கிறார்கள் என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. சமூகத்தில் பல அதிசயங்கள் உள்ளன, அவற்றில் இரட்டையர்களும் ஒன்று.
உருவ ஒற்றுமை காரணமாக ஆசிரியர்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள். எனவே பள்ளி முதல்வர் இரட்டையர்களுக்கு ஒரு சிறப்பு விதியை உருவாக்கினார்
“ஆரம்பத்தில் இருந்தே இரட்டையர்களுக்கு ஒரு விதி உள்ளது. அவர்கள் ஒரே வகுப்பறையில் இருக்கக்கூடாது. பெற்றோர்கள் பெரும்பாலும் பிள்ளைகள் ஒரே பிரிவில் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். அவர்கள் வீட்டில் ஒன்றாகத் தானே இருக்கிறார்கள், இங்கும் அப்படி இருந்தால், மற்ற மாணவர்களுடன் பழகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்க முடியாது. எந்தவொரு உதவிக்கும் அல்லது எந்தவொரு சிக்கலையும் தீர்க்க அவர்கள் ஒருவரை ஒருவர் மட்டுமே சார்ந்து இருப்பார்கள் என நான் பெற்றோரிடம் கூறினேன்.” என்கிறார் ரஷ்மி விஜ்.
செய்தியாளர்- நவ்ஜோத் கவுர், பிபிசி பஞ்சாபி
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – குல்ஷன் குமார், பிபிசி பஞ்சாபி
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு