அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்த பலமானதொரு எதிர்க்கட்சி நாட்டுக்கு அவசியம் என்று ஜக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று மஹர பிரதேசத்தில், இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்க தரப்பினர் தங்களுக்கே நாடாளுமன்றத்தின் அனைத்து ஆசனங்களையும் மக்கள் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறமை வேடிக்கையான விடயம் என்று கூறினார்.
மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பலமான எதிர்க்கட்சியொன்றின் இருப்பு அவசியம் என்றும் வடகொரியா, சீனா போன்ற நாடுகளில்தான் எதிர்க்கட்சியே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், எமது நாட்டில் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, பலமானதொரு எதிர்க்கட்சியொன்று நாட்டுக்கு அவசியம் என்று தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கினால், அது மோசடிகளுக்கு வழிவகுத்துவிடும் எனவும் அவர் கூறினார்.
அத்தோடு, அரசாங்கத்தை சரியாக வழிநடத்த பலமானதொரு எதிர்கட்சியொன்று தேவையென்பதே ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நிலைப்பாடு எனவும் ரஞ்சன் ராமநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.