11
காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயம் ! on Friday, November 01, 2024
கல்கமுவ – எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் – திரப்பனை மற்றும் கத்தொருவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் யுவதி ஒருவரும் இரு இளைஞர்களுமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீகலேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.