15
ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை வரை குறைந்தது 205 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது.
வலென்சியாவில் 202, காஸ்டில்லா லா மஞ்சா பகுதியில் இரண்டு மற்றும் அண்டலூசியாவில் மேலும் ஒன்றுமாக மீட்கப்பட்டது.
கடந்த 20 மாதங்களில் பெய்த மழையை விட செவ்வாய்க்கிழமை எட்டு மணி நேரத்தில் வாலென்சியன் நகரத்தில் அதிக மழை பெய்தது
பாதிக்கப்பட்டவர்களில் 202 பேர் வலென்சியா பகுதியில் மட்டும் இருப்பதாக ஸ்பெயின் அவசர அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் எதிர்வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.