18
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை ! on Friday, November 01, 2024
ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (01) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.