4
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும், 7ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related
Tags: Sri Lankaலொஹான் ரத்வத்த