3
ஆதீரா Friday, November 01, 2024 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 34 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
பலாலி வீதியில், வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி வரையிலும், அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலுமான சுமார் 1.250 கிலோமீட்டர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.