ஸ்பெய்ன் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!

by adminDev2

ஸ்பெய்னில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய நாட்களில் ஐரோப்பாவை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவாக இது பதிவானது.

செவ்வாய்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர்ந்த மழையினால் மலகாவிலிருந்து வலென்சியா வரையிலான ஸ்பெயினின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், பாலங்களும் இடிந்து வீழ்ந்துள்ளன.

மீட்பு பணியாளர்கள் வெள்ளத்தில் மூழ்கியவர்களையும், காணாமல் போனவர்களையும் தேடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, ஸ்பெய்ன் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் புதன்கிழமை (30) பிற்பகுதியில் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.

அதேநேரம், அங்கு ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

செவ்வாயன்று கிழக்கு நகரமான வலென்சியா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு வருடத்திற்கான மழை, சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்