2
ஹோமாகம, மீகொட – படவல பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தின் மீது இன்று (31) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வீட்டின் மீது நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வர்த்தகரை அச்சுறுத்தும் நோக்கில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.