புதிதாக அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத வாகனப் பதிவுப் புத்தகங்கள் மாயமான சம்பவம் !

by wp_shnn

புதிதாக அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத வாகனப் பதிவுப் புத்தகங்கள் மாயமான சம்பவம் ! on Thursday, October 31, 2024

12 வாகனப் பதிவு புத்தகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 8 ஊழியர்களின் தொலைபேசி பதிவுகளை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 கார் பதிவுப் புத்தகங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

சம்பவம் தொடர்பில் திணைக்களத்தின் ஊழியர்கள் 8 பேரின் தொலைபேசி பதிவுகளை பொரளை பொலிஸாரிடம் வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொரளை பொலிஸார் மேற்படி 8 ஊழியர்களின் தொலைபேசி பதிவுகளை வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதிதாக அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத புத்தகங்களே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்