2
பாகிஸ்தானின் லாகூர் நகரம் உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்று தர குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
மக்கள் முகக் கவசம் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.