உலகவாழ் இந்துக்கள் இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

by wamdiness

இந்துக்கள் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது தீபங்களின் ஆவளி என்று அர்த்தப்படும்.

அதாவது தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடப்படும் திருநாள் என்று பொருள். இந்து இதிகாசங்களின் அடிப்படையில் நோக்கினால், மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ண பகவான் வதம் செய்து அழித்தொழித்த நாளாக தீபாவளித் திருநாள் அமைகிறது.

மதக் கோட்பாடுகளின் பிரகாரம், அறியாமை எனும் மன இருளை நீக்கி, அறிவெனும் ஒளியேற்றும் நாளாக தீபாவளித் திருநாள் பார்க்கப்படுகிறது.

இம்முறை நாட்டின் பல பாகங்களில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் மக்கள் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருக்கிறதென எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மற்றும். மலையகத்தின் பிரதான நகரங்களில் தீபாவளி வியாபாரம் களை கட்டியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்