அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் அருச்சுனாவிற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததா ? இல்லையா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் அவர் விளக்கமறியலில் வைக்கும் போது , அவர் சிறை செல்ல முன்னர் , தனது சட்டவாளர் கௌசல்யா என கையை காட்டி விட்டு செல்கின்றார். அதன் பின்னர் கௌசல்யா செல்வதனை தான் நாங்கள் கேட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் போது கௌசல்யா சொல்லுறா தென்பகுதியில் இருந்து ஒரு சட்டவாளரை அழைத்து வர வேண்டும் என , அதற்கு நிதி தேவைப்பட்டது. அதனை எங்கள் நண்பர்கள் தான் திரட்டி கொடுத்தனர்.
ஆனால் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா ? இல்லையா ? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது ? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு
உண்மையில் நிதி சம்பந்தமாக வெளியாட்களுக்கு என்ன தெரியுமோ , அதான் எங்களுக்கும் தெரியும். தெரியாத விடயத்திற்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது.
தேர்தல் முடிய தேர்தல் செலவீனம் தொடர்பில் அருச்சுனா வெளியிடுவார் என நம்புறேன். என தெரிவித்தார்.