பிரதமர் – இத்தாலித் தூதுவரைச் சந்தித்துள்ளார்.

by wamdiness

இத்தாலியுடனான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இத்தாலித் தூதுவர் டமியானோ ப்ரென்கொவிக்கை சந்தித்து அவர் இது பற்றி கலந்துரையாடினர். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவது பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைச் சேர்ந்த கூடுதலான இளைஞர்களுக்கு இத்தாலியில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு இதன்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படவிருக்கிறது.

இத்தாலி முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இலங்கைக்கு கவர்ந்திழுப்பது தொடர்பான கொள்கை வகுப்பு பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜொனி சிம்சன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தொழிலாளர் தராதரம், மகளிர் வலுவூட்டல், சமூக கலந்துரையாடலை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்