தேங்காய் உற்பத்தியில் சரிவு 2025 ஏப்ரல் வரை நீடிக்குமாம்!

by 9vbzz1

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே,

உரிய நேரத்தில் மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய் கருவை இறக்குமதி செய்வது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்