1
நவம்பர் 4 முதல் 9 ஆம் திகதி வரை சிறப்பு தட்டம்மை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் இதுவரை தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடப்படாத குழந்தைகளை குறிவைத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.
தட்டம்மை தடுப்பூசி பொதுவாக 9 மாத வயது குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.
Related
Tags: measlesதட்டம்மை