தட்டம்மை தடுப்பூசி விசேட திட்டம் அமுல் !

by adminDev2

தட்டம்மை தடுப்பூசி விசேட திட்டம் அமுல் ! on Thursday, October 31, 2024

தட்டம்மை தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக் கொள்ளாத மற்றும் ஒரு டோஸ் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டோருக்காக நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசியை செலுத்தும் விசேட திட்டத்தை அமுல்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவகத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடானாலும், 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சில பகுதிகளில் அம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

9 மாதத்தில் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், அதற்கு முன்னரே அக்குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் ஏற்படுவதற்கான அதிக அவதானம் காணப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களும் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை சுட்டிக்காட்டுகின்றது.

தொடர்புடைய செய்திகள்