நாடளாவிய ரீதியில் அபாய நிலை பிரகடனம் ! on Wednesday, October 30, 2024
பன்றிகளிடையே பரவும் ஆபிரிக்க வைரஸ் தொற்று காரணமாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பன்றிகளை நோய் அபாயம் கொண்ட விலங்குகளாக பிரகடனப்படுத்துவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவலயின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சியை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் பன்றி இறைச்சி உற்பத்திகளை தயாரித்தல் ஆகிய செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவலயின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பன்றிகளிடையே பரவும் குறித்த ஆபிரிக்க வைரஸ் மனிதர்களிடையே அல்லது வேறு விலங்குகளிடையே பரவும் எவ்வித அபாயமும் காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என அவர் கூறினார்.
எனினும், பன்றி இறைச்சியை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வதன் மூலம் வேறு பொது சுகாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.