அனுர வந்த பின் தொடங்கியது ஆர்ப்பாட்டம்!

by adminDev

அனுர குமாரதிசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது  உறவுகளுக்கு நீதி கோரி  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக  இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள்,  தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த கோரிநின்றிருந்தனர்.

அதேவேளை உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றையோ அல்லது இழப்பீடுகளை வழங்குவதையோ ஏற்பதில்லையென மீண்டும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.  முhறி மாறி ஆட்சிகளை கைப்பற்றும் அரசுகள் தொடர்ந்தும் ஏமாற்றியே வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதியை வழங்கவேண்டுமென போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் ஜநா அமர்வில் உள்ளுர் பொறிமுறையின் கீழேயே போர்க்குற்றங்களிற்கு நீதியை பெற்றுத்தரவுள்ளதாக அனுரகுமார அரசும் அறிவித்துள்ள நிலையில் பெற்றுத் தர வேண்டும் என  கோசங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்