1
உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இன்றைய தினத்திற்குள் மீள கையளிக்கத் தவறும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை 12 முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை.
கடந்த அரசாங்கத்தின் 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் வழங்கப்பட்டிருந்தன. உரிய வாசஸ்தலங்களை மீள பெற்றுக் கொள்ளும் போது, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்களை செலுத்தியதன் பின்னரே அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறும் அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.