3
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு ! on Wednesday, October 30, 2024
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக ரூபாவின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.06 ரூபாவாகவும், 298.14 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.08 ரூபாவாகவும், 298.16 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
அதேநேரம், மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.