1
இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டில் மொத்தம் 86 ரயில் தடம்புரள்வு சம்பவம் பாதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 139 ரயில் தடம்புரள்வு சம்பவங்களும், 2022 இல் 132 ரயில் தடம்புரள்வு சம்பவங்களும் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தொடரும் ரயில் தாமதம் மற்றும் ரயில் இரத்து தொட்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க நிர்வாகம் தவறினால், அதற்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரின் தலையீட்டில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.