எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பூகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” திருடர்கள் இருக்கும் கட்சிகளை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை நான் அவதானித்து வருகிறேன்.
மக்கள் மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கிறார்கள்.
அந்த மாற்றத்தை ஏற்படுத்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இருக்கும் கட்சியாகவும், புதிய கொள்கைகள் கொண்ட கட்சியாகவும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி காணப்படுகிறது.
ஊழல் – மோசடிகள் அல்லாமல் புதிய இலக்குகளை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
எமது இந்த பயணத்தை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்களின் இந்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் பொய்யாக்க மாற்றறோம். நாம் இந்தத் தேர்தலில் நிச்சயமாக 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
நல்ல வேளை நாம் 22 மாவட்டங்களிலும் போட்டியிடவில்லை. அப்படி செய்திருந்தால் அது பலருக்கு தலைவலையாக வந்திருக்கும்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.