அறுகம்பை தாக்குதல் தொடர்பில் கைதான முன்னாள் அரசியல் கைதிகள் இருவரும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக தடுத்து வைத்து விசாரணைகளை தொடர்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சுற்றுலாப் பிரதேசத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இருந்ததாக கூறப்படும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர், தொடர்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டு தடுத்து வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகின்றது.