பலோன் டி’ஓர் விருதை வென்ற முதல் மான்செஸ்டர் சிட்டி வீரர்!

by adminDev2

மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் மிட்-பீல்டர் ரோட்ரி (Rodri), இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் விருதினை முதல் முறையாக வென்றுள்ளனர்.

கடந்த சீசனில் கழகம் மற்றும் நாட்டிற்காக ஒரே ஒரு ஆட்டத்தில் தோல்வியைக் கண்ட 28 வயதான வீரர், கடந்த ஜூலை மாதம் 2024 யூரோக் கிண்ணத்தை ஸ்பெயின் வெற்றி கொள்வதற்கு உதவியாக இருந்தார்.

இதனால் அவருக்கு திங்கட்கிழமை (28) மாலை பாரிஸில் பலோன் டி’ஓர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அவர் மான்செஸ்டர் சிட்டியுடன், பிரீமியர் லீக், UEFA சூப்பர் கிண்ணம் மற்றும் கழக உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி கழக வரலாற்றில் பலோன் டி’ஓர் விருதினை வென்ற முதல் வீரர் ரோட்ரி ஆவார்.

ரியல் மாட்ரிட் ஜோடியான வினிசியஸ் ஜூனியர் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாமுடனான பலத்த போட்டிக்கு மத்தியில் ரோட்ரி இந்த விருதினை வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்