எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நிதி மோசடி : விரைவில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

by adminDev2

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நிதி மோசடி : விரைவில் புதிய விசாரணைகள் ஆரம்பம் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் இலங்கை கடற்பரப்புக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, இவ்விடயத்தில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பில் புதிய விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (29)  இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தால் இலங்கை கடற்பரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மீனவர்கள் தொழில் ரீதியில் கடும் இழப்புக்களை எதிர்கொண்டனர்.

அதே போன்று இந்த விவகாரத்தில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் புதிய விசாரணைகளை நாம் விரைவில் நிச்சயம் ஆரம்பிப்போம். இது தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைககளையும், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்