அரசியலில் பலரும் என்னை சவாலாகக் கருதுகின்றனர்! – ரஞ்சன்

by admin

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று அந்தக் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று கம்பஹாவில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க, அரசியலில் தனக்கு யாரும் சவால் கிடையாது என்றும் மாறாக பலர் தன்னை சவாலாக நினைப்பதால்தான், தனது அரசியல் வருகைக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன்  தான் தனியாக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ரஞ்சன் தான் நேர்மையாக கசப்பான உண்மைகளை வெளியில் கொண்டுவந்தமையினாலேயே சிறை செய்ய வேண்டி ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் புதியக் கொள்கையுடன் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள தனக்கு , மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும், பச்சை, நீலம், சிவப்பு என ஒரே கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல், மக்கள் எமக்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தான் 2006 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும்,  வந்த காலத்திலிருந்தே பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,  அந்த சவால்களுக்கு தான் வெற்றிகரமாக முகம் கொடுத்திருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க” தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாகவே தனது வேட்புமனுவை நிராகரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று சரியாகத் தெரியவில்லை எனவும் தனக்கு யாரும் சவால் கிடையாது எனவும் மாறாக நான் தான் பலருக்கு சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்