அனுர வந்தாலும் தொடரும் காணி பிடிப்பு!

by adminDev2

தெற்கின் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னராக மண்டைதீவில்; கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தமிழ் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி,; பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, காணி உரிமையாளர், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அத்துடன், காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்பாக அவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னராகவும் முப்படைகளிற்கான காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்வது அம்பலமாகியுள்ளது.

இதனிடையே காணி சுவீகரிப்பிற்கு எதிராக தேர்தல் பரப்புரைகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்