12
அஹுங்கல்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு அஹுங்கல்ல, கல்பொக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பியகம, கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பேராதனை, கெட்டம்பே மற்றும் ரஜவத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெலிஓயா, அலுதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.