14
தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.
குறித்த மனு, சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி, மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட அனுமதி கோரினார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.