மதுபானச்சாலை அனுமதி: விடாமல் துரத்தும் கறுப்பு!

by wp_shnn

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அண்மைக்காலமாக மதுபானச்சாலை அனுமதி தொடர்பில் காட்டிவரும் மௌனம் நையாண்டியாகியுள்ளது.

இதனிடையே தமிழரசிலுள்ள எவரும் மதுபானச்சாலைக்கான அனுமதியை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என பொதுஐன பெரமுன சவால் விடுத்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மதுபானச்சாலை விடயம் தொடர்பில் முன்னதாக குரல் எழுப்பி வந்திருந்த நிலையில் தற்போது மௌனம் காத்தேவருகின்றார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியில் சிலர் மதுபானச்சாலைக்கான அனுமதிகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றே  பொதுஐன பெரமுன சவால் விடுத்துள்ளது.

மதுபானச்சாலைக்கான அனுமதியையோ – சாராயக் கடைகளைளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை என பொதுஜனபெரமுன வேட்பாளர் ஒருவர் சத்தியக் கடதாசி மூலம் அண்மையில் யாழில் வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல் தமிழரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருநதார்.

முதலில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பொதுஜனபெரமுன வேட்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்