14
பிலிப்பைன்சை தாக்கிய டிராமி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளக் காடாக மாறியிருக்கின்ற நிலையில் மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன.
நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் பலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 40 பேர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.