3
பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் படுகொலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அவரது கார் திருடப்பட்டு, பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.