லெபனானின் கிழக்கு பெக்கா (Bekaa) பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பால்பெக் பிராந்தியத்தில் 16 பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஹெஸ்புல்லாவின் கோட்டையான பள்ளத்தாக்கில் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் இன்னும் பதிலளிக்கவில்லை.
கடந்த ஐந்து வாரங்களாக லெபனான் முழுவதும் ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.
ஹெஸ்பொல்லாவின் செயல்பாட்டாளர்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆயுத தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.