ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் பணிஷ்கரிப்புக்கு திட்டம் ! on Tuesday, October 29, 2024
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளை இணைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களின் பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய பின்னர் ரயில் நடத்துனர்களின் பதவி உயர் மற்றும் சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தவறினால் பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள போதும் அரசாங்கம் அதனை மேற்கொள்ளாது ரயில் நடத்துனர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள திட்டத்தை தயாரித்துள்ளது.
என்றாலும் நத்துனர்களின் சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு நடைமுறை இடம்பெறாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் தீர்வு கிடைக்காததால், தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்காவிட்டால் உடனடியாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு செல்ல தீர்மானித்திருக்கிறோம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.