போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை !

by wp_shnn

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை ! on Monday, October 28, 2024

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பொரளை மகசின் சிறைச்சாலைக்குப் பின்புறம் உள்ள வீதியில் 11.07 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இவருக்கு எதிராக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்