த.வெ.க மாநாட்டில் விஜயின் பேச்சு பற்றி தொண்டர்கள் சொல்வது என்ன?
த.வெ.க மாநாட்டில் விஜயின் பேச்சு பற்றி தொண்டர்கள் சொல்வது என்ன?
நடிகர் விஜய் துவங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.
மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார்.
யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.
“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர்.
விஜயின் இத்தகைய கருத்துகள் குறித்து அவரது கட்சித் தொண்டர்கள் என்ன சொல்கின்றனர்?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.