ஜப்பான் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி!

by sakana1

ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பாராளுமன்றப் பெரும்பான்மை இல்லாமல் போயுள்ளது.

அதன்படி, பல வருடங்களுக்குப் பின்னர் அவர்களுக்கு பாரிய தோல்வி ஏற்பட்டிருப்பதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள முதற்கட்ட வாக்கு முடிவுகள் காட்டுகின்றன.

வெளியிடப்பட்டுள்ள ஆசன விபரங்களுக்கு அமைய எதிர்க்கட்சி 235 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளும் கட்சிக்கு இதுவரையில் 208 ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன.

கீழ் சபையின் பெரும்பான்மைக்காக 233 ஆசனங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 22 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

அங்கு மொத்தமாக 466 ஆசனங்கள் காணப்படுகின்றன. ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்ட சிக்கோறு இஷிபாவின் நிர்வாக லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு, மூன்று தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்