சுற்றுலா தளங்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு உறுதி !

by guasw2

சுற்றுலா தளங்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு உறுதி ! on Monday, October 28, 2024

நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் பிரதான பகுதிகளில் எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுநிலை) எயார் வைஷ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த தெரிவிக்கையில்,

“நாட்டின் பிரதான சுற்றுலாத் தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக, புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து, தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த விடயம் தொடர்பாக வெளிநாடுகள் தமது பயணிகளுக்கு முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது.

இதையடுத்தே விடயம் பகிரங்கமானது. ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத் தளங்கள் உட்பட நாட்டின் பிரதான பகுதிகள் அனைத்துமே பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

தற்போது அந்நிலைமை மேலும் தீவிரமாக்கப்பட்டு பாதுகாப்பு அதியுச்ச அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பிரஜைகளும் அச்சமடைய வேண்டியதில்லை.

நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் உட்பட நாட்டின் பிரஜைகள் அனைவரும் சுதந்திரமாக நடமாட முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்