3
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் குறித்த அறிக்கையை இன்று (28) வெளியிடவுள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த அறிக்கையினை கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று முற்பகல் 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related
Tags: Easter attackSri LankaUdaya Gammanpilla